முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை - உடனே Apply பண்ணுங்க..!
தென்காசி மாவட்டத்தில் நலிந்த நிலையிலுள்ள முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதள முகவரி www.sdat.tn.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்.
தகுதி: சர்வதேச அல்லது தேசிய போட்டிகளில் முதலிடம்,இரண்டாமிடம், மூன்றாம் இடங்களில் வெற்றி பெறுதல் அல்லது பங்கேற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.09.2024 மாலை 6 மணி வரை ஆகும்.
வயது வரம்பு: 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
ஓய்வூதியம்
விண்ணப்பதாரர்கள் :விண்ணப்பதாரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.
தகுதியான விளையாட்டுப்போட்டிகள் :மத்திய மற்றும் மாநில அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான அனைத்து வகையான போட்டிகள் ஆகும்.
முகவரி மற்றும் தொடர்பு கொள்ள வேண்டியஎண்: மாவட்ட விளையாட்டு அலுவலகம், 163 அ. ரயில்வே ரோடு, தென்காசி என்ற அலுவலக முகவரியிலோ அல்லது 04633 212 580 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.