இந்தியாவில் ஒலிம்பிக் பதக்கத்தின் மதிப்பு இவ்வளவு தானா? - ஓர் பார்வை
இந்தியாவில் ஒலிம்பிக் பதக்கத்தின் பண மதிப்பு என்பது பதக்கம் வென்றவர் எந்த மாநிலத்தில் இருந்து வருகிறார் என்பதைப் பொறுத்து அமைகிறது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 23 ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளது. வழக்கம்போல ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் தங்கள் மாநில வீரர்களுக்கு அரசுகள் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது.
அந்த வகையில் ரூ.25 லட்சம் முதல் ரூ.6 கோடி வரை பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம், ஒடிசா மற்றும் சண்டிகர் ரூ.6 கோடி, கர்நாடகா, குஜராத் ரூ.5 கோடி, டெல்லி, ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் ரூ.3 கோடி,பஞ்சாப் ரூ.2.25 கோடி, இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் ரூ.2 கோடி அறிவித்துள்ளன.
அதேபோல் உத்தரகாண்ட் ரூ.1.5 கோடி, மணிப்பூர் ரூ.1.2 கோடி, மராட்டியம்,கேரளா,கோவா ரூ.1 கோடி, மேகலயா ரூ.75 லட்சம்,ஜம்மு காஷ்மீர் ரூ.50 லட்சம், மேற்கு வங்காளம் மட்டும் மிக குறைவாக ரூ.25 லட்சம் அறிவித்துள்ளது.