பெண்களுக்கு ரூ.5000 வழங்கும் அரசு திட்டம் - யாரெல்லாம் தகுதியானவர்கள்?
பெண்களுக்கு ரூ.5000 வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
அரசுத் திட்டம்
கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதையும், சிகிச்சை மற்றும் மருந்துகளின் செலவில் உதவுவதையும் நோக்கமாக பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் கீழ், ஒவ்வொரு ஆண்டும், கர்ப்பிணி மற்றும் கைக்குழந்தையுடன் இருக்கும் பெண்களின் கணக்கில் 5000 ரூபாய் டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த 5000 ரூபாய் டிபிடி மூலம் பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக மூன்று தவணைகளாக அனுப்பப்படுகிறது.
கர்ப்பினி பெண்கள்
தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் அல்லது பொருளாதார நிலையில் மிகவும் நலிவடைந்த பெண்களுக்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. எந்தவொரு மத்திய அல்லது மாநில அரசு நிறுவனங்களுடனும் தொடர்புடைய பெண்களுக்கு இந்தத் திட்டத்தின் பலனை அரசு வழங்குவதில்லை.

அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களில் கர்ப்பகால சிகிச்சையின் போது இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து நிதி உதவியைப் பெறலாம். மேலும், https://pmmvy.nic.in/Account/Login என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.