அடேங்கப்பா.. இறந்த பிறகும் கோடியில் சம்பாதிக்கும் பிரபலம் -யாருன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
உயிரிழந்த பிறகும் சம்பாதிக்கும் பிரபலம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பிரபலம்
திரைத்துறையில் உள்ள பிரபல பாடகர்கள், திரைப்பட நட்சத்திரங்கள், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் உயிருடன் இருக்கும் போது அதிக அளவில் சம்பாதிப்பதை நாம் அறிந்து இருப்போம்.
மேலும் பிரபலமானவர்கள் தங்கள் மரணத்திற்குப் பிறகும் தங்கள் செல்வம், உரிமைகள் மற்றும் ராயல்டியைத் தொடர்வது மிகவும் பொதுவானதாக உள்ளது.
ராயல்டி என்பது குறிப்பாக அந்த நபர்களின் பிராண்ட், இசை, திரைப்படங்கள் அல்லது பிற படைப்புச் சொத்துகள் மூலம் கிடைப்பதாகும் . மேலும் அவர்கள் இறந்த பிறகும் அவர்களின் படைப்புகள் மூலம் ஆண்டும் தோறும் வருமானத்தை வழங்குகின்றன.
அந்த வகையில் மைக்கேல் ஜாக்சன், எல்விஸ் பிரெஸ்லி, பிரின்ஸ் மற்றும் ஜேம்ஸ் டீன் போன்ற பிரபலங்கள் உயிரிழந்த பிறகும் தங்கள் இசை, திரைப்படங்கள் மூலம் பல கோடிக்கணக்கான தொகையை ராயல்டியாக சம்பாதித்து வருகின்றனர்.
ராயல்டி
அதன்படி, 2023-24 ஆம் ஆண்டில் மைக்கேல் ஜாக்சன் இசை, பாடல்கள், ஆல்பங்கள் மூலம் ரூ. 5,044 கோடி ராயல்டியாக குடும்பத்தினருக்குக் கிடைத்தது. மைக்கேல் ஜாக்சனின் மரணத்திற்குப் பிறகும், அவரது இசை, பாடல்கள், ஆல்பங்கள் மற்றும் திரைப்படங்கள் அவரது குடும்பத்திற்கு பெரும் வருவாயைக் கொண்டு வருகின்றன.
2023-24 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின்படி, ரூ. 5,044 கோடி ராயல்டியாக மைக்கேல் ஜாக்சன் குடும்பத்தினருக்குக் கிடைத்தது. அதாவது இந்திய மதிப்பீட்டில் சுமார் 800 கோடி ரூபாய் சம்பாதிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.