ரூ.500 கோடி செலவு: மணமகளின் உடை ரூ.17 கோடி - இந்தியாவில் நடந்த பிரமாண்ட திருமணம்!
50,000 விருந்தினர்கள் பங்கேற்ற இந்தியாவின் மிகவும் செலவுமிக்க திருமணம் குறித்த தகவல்.
திருமணம்
கர்நாடக முன்னாள் அமைச்சரும், சுரங்கத் தொழிலதிபருமான ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிராமணி ரெட்டிக்கும், ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் விக்ரமின் மகன் ராஜீவ் ரெட்டிக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணம் தான் இந்தியாவிலேயே அதிக செலவில் நடந்த திருமணமாக உள்ளது. இதில் ரூ. 500 கோடி செலவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதில் மணமகள் பிராமணி ரெட்டியின் உடை தங்க நூல்களால் மிகவும் நுணுக்கமாக காஞ்சீபுரம் புடவையாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. அந்த உடையின் விலை மட்டும் ரூ. 17 கோடி ஆகும்.
15 ஹெலிகாப்டர்கள்
மேலும் மணமகள் அணிந்த ஒட்டுமொத்த நகைகளின் மதிப்பு ரூ. 90 கோடி. இந்த திருமணத்தில் வகை வகையான உயர்தர பதார்த்தங்கள் விருந்தினர்களுக்கு படைக்கப்பட்டது.
விருந்தினர்களை அழைத்து வருவதற்காக 2,000 டாக்ஸிகள், 15 ஹெலிகாப்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேலும், பெங்களூருவில் நடந்த இந்த திருமணத்தின்போது நட்சத்திர விடுதிகளில் 1500 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன.
அதுமட்டுமா, முன்னதாக இந்த திருமண அழைப்பிதழுடன் ஒரு வெள்ளி விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. மொத்த அழைப்பிதழுக்கு மட்டும் ரூ. 5 கோடி செலவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.