ஒரே ஆண்டில் ரூ.477 கோடி - பாஜகவிற்கு குவிந்த நன்கொடை..!
Indian National Congress
BJP
By Thahir
2020 - 2021 நிதி ஆண்டு பாஜக ரூ.477 கோடி நன்கொடை கிடைத்துள்ளது.
அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் பெறும் நன்கொடைகளை தேர்தல் கமிஷனுக்கு அறிக்கையாக தாக்கல் செய்வது கட்டாயம்.

அந்த வகையில்,கடந்த 2020 - 2021 ஆம் ஆண்டு நிதி ஆண்டில்,தேசிய கட்சியான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி பெற்ற நன்கொடை விவரங்களை தேர்தல் கமிஷனில் சமர்ப்பித்துள்ளது.
கட்சிகள் சமர்ப்பித்துள்ள நன்கொடை விவரங்களை தேர்தல் கமிஷன் இணையத்தில் வெளியிட்டுள்ளது.
பாஜக,பல்வேறு நிறுவனங்கள்,அறக்கட்டளைகள் மூலம் பெறப்பட்ட நன்கொடை ரூ.477 கோடியே 54 லட்சத்து 50 ஆயிரத்து 77 பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி ரூ.74 கோடியே 50 லட்சத்து 49 ஆயிரத்து 731 பெற்றுள்ளது.