இந்திய ஹாக்கி கோல் கீப்பருக்கு அடித்த அதிர்ஷ்டம்...!

TokyoOlympics PRSreejesh indianhockeygoalkeeper DrShamsheerVayalil
By Petchi Avudaiappan Aug 09, 2021 12:25 PM GMT
Report

இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷூக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகையை துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஷம்ஷீர் வயாலில் அறிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்கு பின்பு வெண்கலப் பதக்கம் வென்றது. இந்த போட்டியில் அணியின் கோல்கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் சிறப்பான பங்களிப்பை அளித்தார்.

அவர் கொஞ்சம் சொதப்பியிருந்தாலும் இந்தியா பதக்க வாய்ப்பை இழந்திருக்கும். இந்திய ஹாக்கி அணிக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், துபாயைச் சேர்ந்த விபிஎஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைவர் ஷம்ஷீர் வயாலில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கோல்கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷை ஊக்குவிக்கும் விதமாக ரூ.1 கோடி வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

You May Like This Video