விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு - சிக்கிய முக்கிய ஆவணங்களின் விவரம்!
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் பல ஆவணங்களும், நகைகளும் கைபற்றப்பட்டது.
சி.விஜயபாஸ்கர்
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். சுமார் 12மணி நேரம் சோதனையானது நடைபெற்றது. இது குறித்த முதல் தகவல் அறிக்கையில்,
அவரது மனைவி ரம்யாவும் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடியே 22 லட்சம் மதிப்பிலான சொத்துகளை குவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் சோதனை நிறைவு பெற்றதை தொடர்ந்து அவரது வீட்டின் முன்பு குவிந்த விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் என்னென்ன ஆவணங்களை கைப்பற்றினார்கள் என்று தகவல் தெரிவிக்காமல் சென்ற நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை கண்டித்து முழக்கங்களையும் எழுப்பினர்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பான சோதனையில் 18.37 லட்சம் ரூபாய், 1872 கிராம் தங்க நகைகளும், 8.28 கிலோகிராம் வெள்ளி பொருட்கள் கண்டறியப்பட்டன. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 120 ஆவணங்கள்,
1 வன் தட்டு, 1 பென்டிரைவ், 2 ஐ போன்கள் மற்றும் 4 வங்கி பாதுகாப்பு பெட்டக சாவிகள் இவ்வழக்கின் விசாரணைக்காக கைப்பற்றப்பட்டன.