பெண்களுக்கு இனி மாதம் ரூ. 1500 ஓய்வூதியம் - அரசு அசத்தல் திட்டம்!
பெண்களுக்கு மாதம் ரூ.1500 ஓய்வூதியம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ரூ.1500 ஓய்வூதியம்
இமாச்சல பிரதேசத்தில், முதல்வர் தாக்கூர் சுக்விந்தர் சிங் சுகு இந்திரா காந்தி பியாரி பெஹ்னா சம்மன் நிதி யோஜனா திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
இதன்கீழ், லாஹவுல்-ஸ்பிடி மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1500 ஓய்வூதியம் வழங்கப்படும். அதன்படி, சுமார் 2.37 லட்சம் பெண்கள் பயன்பெறவுள்ளனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், ஹிமாச்சல பிரதேசம் அதன் வரலாற்றில் மிகப்பெரிய பேரழிவை எதிர்கொண்டது.
அரசு அறிவிப்பு
இதில் 525 பேர் இறந்தனர் மற்றும் 16,000 வீடுகள் சேதமடைந்தன. மத்திய அரசிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்காத நிலையில், பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசு ரூ.4500 கோடியை வழங்கியது, இதன் கீழ் வீடு முழுமையாக சேதமடைந்தால் இழப்பீடு தொகை ரூ.1.30 லட்சத்தில் இருந்து ரூ.7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளின் திருமண வயதை 18லிருந்து 21 ஆக உயர்த்திய நாட்டிலேயே முதல் மாநிலமாக உருவாகப்போகிறது. விதவை பெண்களின் குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் ஏற்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
வரும் காலங்களில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பெண்களுக்கு இத்திட்டத்தின் பலன்கள் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.