பொங்கலுக்கு பரிசு தொகுப்புடன் ரூ.1000 - யார் யாருக்கு வழங்கப்படும்..? தமிழக அரசு அறிவிப்பு..!
வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் அட்டைக்காரர்களுக்கு ரூ.1000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
பொங்கல் பரிசு தொகை
வரும் பொங்கலை முன்னிட்டு அரசு சார்பில், பொங்கல் பரிசு பொருட்கள் மட்டுமில்லாமல் ரூ.1000 ரொக்க பணமும் வழங்கப்பட்டு வருகின்றது.
ஆனால், இந்தாண்டு பெரும் சந்தேக கேள்விகளை எழுப்பியுள்ள ஒன்றாக அமைய காரணம் இந்த வருடம் வெள்ள பாதிப்புகள் மற்றும் அதற்காக அரசு அறிவித்த நிவாரணமாகும்.
முதல்வர் அறிவிப்பு
இந்நிலையில், தற்போது தமிழக முதல்வர் முக ஸ்டாலின், வரும் பொங்கலை முன்னிட்டு தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து ரேஷன் அட்டைக்காரர்களுக்கும் ரூ.1000 ரொக்கம் பணத்துடன் சேர்த்து பொங்கல் பண்டிகை தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
அனைத்து நியாயவிலை கடைகளும் ரேஷன் அட்டைக்காரர்களுக்கு இந்த தொகை வழங்கப்படும் என்றும் சமீபத்தில் வெள்ள மழை பாதிப்பை அடைந்த தென்மாவட்டங்களிலும் இந்த ரொக்கம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பரிசு தொகுப்பு
1 கிலோ சர்க்கரை
முழு கரும்பு
1 கிலோ பச்சரிசி
விலையில்லா வெட்டி சேலை