குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000: எப்போது? உதயநிதி தகவல்
5 மாதங்களில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுவதாக உதயநிதி தெரிவித்துள்ளார்.
மகளிருக்கு ரூ.1000
ஈரோடு கிழக்குத் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மகளிருக்கான ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை 5 மாதங்களில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலின்போது மகளிருக்கு மாதா மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து பல மாதங்கள் ஆகியும் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து மு.க.ஸ்டாலினிடம் கேட்டபோது விரைவில் மகளிருக்கான ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் திட்டம் அமலுக்கு வரும் என கூறினார். தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது.