குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 செப்டம்பர் மாதம் 15ம் தேதி தொடக்கம் - அரசு அறிவிப்பு

M K Stalin Government of Tamil Nadu Palanivel Thiagarajan Tamil Nadu Budget 2023
By Thahir Mar 20, 2023 06:22 AM GMT
Report

பட்ஜெட் கூட்ட தொடரில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-2024 க்கான பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.

இதில், மாற்று திறனாளிகளுக்கு ஓய்வூதிய திட்டம், காலை உணவு திட்டம் , சென்னையில் சர்வதேச விளையாட்டு மையம் என பல்வேறு திட்டங்களையும், அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் நிதியமைச்சர் அறிவித்து வருகிறார் .  

பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்

* விழுப்புரம் மரக்காணத்தில் ரூ.25 கோடியில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும்.

* ஆன்லைன் மூலம் தண்ணீர் வரி மற்றும் வீட்டு வரி செலுத்த இணையதளம் தயார் செய்யபட்டுள்ளது.

* கட்டட வரைப்படம், மனை வரைபட அனுமதியை இணைய வழியில் பெற இணையதளம் உருவாக்கப்படும்.

* நிலம் வாங்கும் போது பதிவு செய்யபபதிவு கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைப்பு 

* தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைப்பார் என அறிவிப்பு. இத்திட்டத்திற்கு 7000 கோடி ருபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

rs-1000-for-households-starting-from-september

பெண்கள் பெரிதும் எதிர்பார்த்து குடும்ப தலைவிகளுக்கான உரிமைத்தொகை பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.