குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 செப்டம்பர் மாதம் 15ம் தேதி தொடக்கம் - அரசு அறிவிப்பு
பட்ஜெட் கூட்ட தொடரில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-2024 க்கான பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.
இதில், மாற்று திறனாளிகளுக்கு ஓய்வூதிய திட்டம், காலை உணவு திட்டம் , சென்னையில் சர்வதேச விளையாட்டு மையம் என பல்வேறு திட்டங்களையும், அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் நிதியமைச்சர் அறிவித்து வருகிறார் .
பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்
* விழுப்புரம் மரக்காணத்தில் ரூ.25 கோடியில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும்.
* ஆன்லைன் மூலம் தண்ணீர் வரி மற்றும் வீட்டு வரி செலுத்த இணையதளம் தயார் செய்யபட்டுள்ளது.
* கட்டட வரைப்படம், மனை வரைபட அனுமதியை இணைய வழியில் பெற இணையதளம் உருவாக்கப்படும்.
* நிலம் வாங்கும் போது பதிவு செய்யபபதிவு கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைப்பு
* தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைப்பார் என அறிவிப்பு. இத்திட்டத்திற்கு 7000 கோடி ருபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
பெண்கள் பெரிதும் எதிர்பார்த்து குடும்ப தலைவிகளுக்கான உரிமைத்தொகை பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.