கொரோனாவால் இறந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்...தமிழக அரசு அரசாணை வெளியீடு...
கொரோனாவால் இறந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா காலத்தில் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் பத்திரிகையாளர்கள் முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைப் பெற உரிமை உடையவர்களாகின்றனர் என அறிவித்தார்.
மேலும் கொரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள்,ஊடகவியலாளர்களுக்கானசிறப்பு ஊக்கத் தொகை 3000 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும் அறிவித்தார். இந்நிலையில் இது தொடர்பாக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.