மகளிர் தினத்தன்று குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 - அரசு அதிரடி!
குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பை மார்ச் 8ம் தேதி வெளியிடப்படவுள்ளது.
ரூ.1000
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைத்ததில் இருந்து குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்ற கெள்வி எழுந்த வண்ணம் இருந்தன. எதிர்க்கட்சிகளும் அந்த வாக்குறுதியை முன்வைத்தே தமிழக அரசை விமர்சித்து வருகின்றனர்.
இதற்கிடையில், நிதி பற்றாக்குறை காரணமாக குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் தாமதமாகி வருவதாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.
மகளிர் தினம்
இந்நிலையில் ஜனவரி 4ம் தேதி நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ம் தேதி தமிழக அரசு குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.