ஆஸ்கர் நிகழ்ச்சி மேடையில் ஒலிக்கப்போகும் ‘நாட்டு நாட்டு’ பாடல்... - இந்தியா பெருமிதம்...!
ஆஸ்கர் நிகழ்ச்சி மேடையில் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஒலிக்கப்போகதாக தகவல் வெளியாகியுள்ளது.
RRR திரைப்படம்
இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் கடந்த ஆண்டு வெளியானது. இப்படம் சுமார் ரூ.1,150 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. உலகம் முழுவதும் வெளியிடப்பட்ட இப்படம் பல கோடிகளை அள்ளியது.
ஆஸ்கர் நிகழ்ச்சி மேடையில் ‘நாட்டு நாட்டு’ பாடல்
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான RRR திரைப்படம் 2023ம் ஆண்டு ஆஸ்கார் விருதுகளுக்கு முன்னதாக அமெரிக்காவில் மார்ச் 3ம் தேதி மீண்டும் வெளியிடப்படவுள்ளது.
சிறந்த பாடல் பிரிவில் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் மார்ச் 12ம் தேதி நடைபெற உள்ள ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் அரங்கேற்றம் நடைபெற இருக்கிறது. அப்போது நிகழ்ச்சியில் ராகுல் சிப்ளிகஞ்ச் கால பைரவா இணைந்து பாட இருக்கிறார்.
Se confirmó que NAATU NAATU de RRR tendrá número musical en los Oscars 2023.
— Carla ❁ (@shannonlada) February 28, 2023
NECESITO a Ram Charan y N. T. Rama Rao Jr. dándolo todo con el baile de la canción.
Prendiendo velitas para que aparezcan ?️ #Oscarspic.twitter.com/Wb8cbCFssd