ராஜமௌலி படம் எப்போ ரிலீஸ் தெரியுமா? - வெளியானது முக்கிய அறிவிப்பு
இயக்குநர் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் ரிலீஸ் குறித்து படக்குழு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பாகுபலி-2 படத்தின் வெற்றிக்குப் பிறகு ராஜமௌலி இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராம் சரண், ஜூனியர் NTR , அஜய் தேவ்கன், அலியா பட் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக இருந்த நிலையில் இந்தியாவில் எதிர்பாராத விதமாக கொரோனா தாக்கம் அதிகரிக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதனால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதால் படம் குறித்து மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்து படக்குழு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இந்தியாவில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்தால் ஆர்.ஆர்.ஆர் படம் மார்ச் 18 ஆம் தேதி அல்லது ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
#RRRMovie on March 18th 2022 or April 28th 2022. ?? pic.twitter.com/Vbydxi6yqo
— RRR Movie (@RRRMovie) January 21, 2022