ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர். படம் எப்படி இருக்கு? - வெளியானது ட்விட்டர் விமர்சனம்

Rajamouli RRRMovie ஆர்ஆர்ஆர் JrNTR RamCharan RRRreview
By Petchi Avudaiappan Mar 25, 2022 04:33 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர். படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. 

 “பாகுபலி” படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலி ஆந்திர மாநிலத்தில் வாழ்ந்த அல்லூரி சீதாராமராஜு, கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதையை கற்பனையாக எழுதி ஆர்.ஆர்.ஆர் என்ற பெயரில் படமாக எடுத்துள்ளார். 

இந்த படத்தில்  ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் ஹீரோக்களாகவும், ஆலியா பட் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும் படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா சரண், சமுத்திரகனி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஏற்கனவே படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் படம் இன்று தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது. இதனை முன்னிட்டு காலை முதலே தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. படம் பார்த்த பலரும் இதுகுறித்த விமர்சனத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.