பிரபல தயாரிப்பாளர் மகனுடன் சமந்தாவுக்கு 2வது திருமணம் - தீயாய் பரவும் தகவல்
சமந்தா இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
சமந்தா
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை சமந்தா சில வருடங்களுக்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவரும் கருத்து வேறுபாட்டு காரணமாக விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.
அதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இவர்களின் விவாகரத்து அறிவிப்பு என்பது இன்றும் பேசு பொருளாக இருந்து வருகிறது. தொடர்ந்து, உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது மீண்டு வந்துள்ளார்.
2வது திருமணம்
இந்நிலையில் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சமந்தா ஆர்ஆர்ஆர் திரைப்பட தயாரிப்பாளர் டிவிவி தனய்யாவின் மகன் கல்யாணை திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் பரவியது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாதது குறிப்பிடத்தக்கது.
கல்யாண் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் உருவாகி வரும் ஆதிரா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.