அமெரிக்காவில் 200 தியேட்டர்களில் வெளியாகும் ‘RRR’ படம் - டிக்கெட்டுக்கள் விற்பனை அமோகம்...!

United States of America
By Nandhini Mar 01, 2023 08:16 AM GMT
Report

அமெரிக்காவில் 200 தியேட்டர்களில் வெளியாகும் ‘RRR’ படம் மறுவெளியீடு செய்யப்படுவதால் டிக்கெட்டுக்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது.

RRR திரைப்படம்

இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் கடந்த ஆண்டு வெளியானது. இப்படம் சுமார் ரூ.1,150 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. உலகம் முழுவதும் வெளியிடப்பட்ட இப்படம் பல கோடிகளை அள்ளியது.

பல விருதுகளை வென்று RRR மாபெரும் சாதனை

சமீபத்தில் நடைபெற்ற ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் விருதுகளில் RRR பல பிரிவுகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. RRR படம் சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த அதிரடி திரைப்படம், சிறந்த சண்டைக்காட்சிகள் மற்றும் சிறந்த பாடல் பிரிவுகளில் விருதை அள்ளி மாபெரும் சாதனை படைத்துள்ளது. RRR படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது. இதனையடுத்து, வரும் மார்ச் 12ம் தேதி ஆஸ்கார் 2023 விருதை தட்டிச்செல்லுமா என்று ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.

rrr-movie-screening-yet-1647-seat-show-booked

அமெரிக்காவில் 200 தியேட்டர்கள் மறு வெளியீடு

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான RRR திரைப்படம் 2023ம் ஆண்டு ஆஸ்கார் விருதுகளுக்கு முன்னதாக அமெரிக்காவில் மீண்டும் வெளியிட உள்ளது. இதை படத்தின் விநியோகஸ்தர் வேரியன்ஸ் பிலிம்ஸ் டுவிட்டர் மூலம் உறுதி செய்துள்ளார்.

இந்த டோலிவுட் பிளாக்பஸ்டர் வரும் மார்ச் 3 முதல் அமெரிக்காவில் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட உள்ளது. RRR படம் தெலுங்கில் திரையிடப்பட உள்ளது.

டிக்கெட்டுகள் விற்பனை அமோகம்

இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸில் ‘ஆர்ஆர்ஆர்’ படம் ஆஸ்கார் விருதை முன்னிட்டு பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2023 ஆஸ்கார் விருதுகளில் 14 பிரிவுகளில் இந்தப் படம் சமர்ப்பிக்கப்பட்டு ஒரு பரிந்துரையைப் பெற்றுள்ளது. முக்கிய ஆஸ்கார் 2023 நிகழ்வுக்கு முன்னதாக, RRR லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட உள்ளது. சுவாரஸ்யமாக, ஸ்கிரீனிங் 1600 க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகளை விற்பனையாகியுள்ளது. RRR இந்தியாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் மிகப்பெரிய வெற்றிப் படமாக உருவெடுத்துள்ளது.