ராஜஸ்தானுடன் போராடி தோற்ற கொல்கத்தா அணி - ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சஹால் சாதனை
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி போராடி தோற்றது.
மஹாராஷ்ட்ராவில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் சிறப்பாக விளையாடி சதமடித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட கொல்கத்தா அணியில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் - ஆரோன் பிஞ்ச் ஜோடி சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். திரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்த நிலையில் அவுட்டாயினர்.
இதன்பின் 17வது ஓவரை வீசிய ராஜஸ்தான் வீரர் யுஸ்வேந்திர சஹால் சுழலின் முதல் பந்தில் வெங்கடேஷ் அய்யரும், கடைசி 3 பந்தில் ஷ்ரேயாஸ் அய்யர், பேட் கம்மின்ஸ் , மாவி அவுட்டாக, சஹால் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதனிடையே ஆட வந்த உமேஷ் யாதவ் அதிவேக பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் பந்தை விளாசி தள்ளினார். இதனால் இப்போட்டியில் கொல்கத்தா அணி எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 3 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில் 210 ரன்களுக்கு கொல்கத்தா அணி ஆல் அவுட்டானது.
இதனால் ராஜஸ்தான் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி தரப்பில் அதிகப்பட்சமாக யுஸ்வேந்திர சஹால் 5 விக்கெட்களை கைப்பற்றினார்.