மோசமான தோல்வியுடன் விடைபெற்றது சென்னை அணி ... ஐபிஎல் ரசிகர்கள் ஏமாற்றம்
ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் 2 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். மற்றொரு தொடக்க வீரரான டெவன் கான்வே 16 ரன்களில் அவுட்டானார். மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய மொய்ன் அலி ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை விளாசி தள்ளினார்.
19 பந்துகளில் அரைசதம் கடந்த அவர் வேகமாக ரன் குவித்தார். ஆனால் மறுமுனையில் ஜெகதீஷன் (1), அம்பத்தி ராயூடு (3), சாண்டனர் (1) ரன்கள் எடுத்து அவுட்டாயினர். கடைசி கட்டத்தில் தோனி 26 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்துள்ள சென்னை அணி 150 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக மெக்காய், யுஸ்வேந்திர சாஹல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து களம் கண்ட ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 59, ரவிச்சந்திரன் 40 ரன்கள் விளாச 19.4 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. இதனால் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதன்மூலம் ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் பிடித்ததோடு மட்டுமல்லாமல் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது.
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan