தோல்வி...தோல்வி...தோல்வி.. திருந்தாத பெங்களூரு - மாஸ் காட்டிய ராஜஸ்தான் அணி
பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
புனேயில் இன்று நடைபெற்ற 39வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நிலையில், அதிகப்பட்சமாக ரியான் பராக் மட்டும் 56 ரன்கள் விளாசினார்.
மற்ற வீரர்கள் சொதப்ப ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. பந்துவீச்சில் சிராஜ், ஹேசில்வுட், ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதை தொடர்ந்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கி விளையாடியது. அந்த அணியில் ஒருவர் கூட நிலைத்து நின்று விளையாடததால் பெங்களூரு அணி 19.3 ஓவர்கள் முடிவில் 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் ராஜஸ்தான் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.