இங்கிலாந்து வீரர்களால் ஐபிஎல் தொடரில் ஏற்படும் சிக்கல்..!
ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள் மீண்டும் செப்டம்பர் 15-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. ஒருபுறம் விறுவிறுப்பாக இதற்கான பணிகள் நடந்து வர, மறுபுறம் போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் தவிர்த்து மற்ற வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது ஐபிஎல் அணிகளில் ராஜஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களில் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் லியம் லிவிங்ஸ்டன் ஆகியோர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கொரோனா
மற்றும் மற்ற போட்டி தொடர்களில் பங்கேற்க வேண்டி உள்ளதால் விளையாட முடியாததாக கூறப்படுகிறது.