2-வது தகுதி சுற்றில் வெல்லப்போவது யார்? - பெங்களூரு அணிக்கு எதிராக ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு!

Rajasthan Royals Royal Challengers Bangalore Sanju Samson Faf du Plessis
By Swetha Subash May 27, 2022 01:49 PM GMT
Report

ஐபிஎல் தொடரின் குவாலிபையர் 2 போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

கடந்த மார்ச் 26-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கிய15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

2-வது தகுதி சுற்றில் வெல்லப்போவது யார்? - பெங்களூரு அணிக்கு எதிராக ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு! | Rr Chose To Bowl First Qualifier2 Rcb

இன்னும் இரண்டே ஆட்டங்களில் இந்தாண்டின் சாம்பியன் யார் என்பது தெரிந்து விடும்.

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி ஏற்கனவே இறுதிசுற்றை எட்டி விட்ட நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்று பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறுகிறது.

இந்தப் போட்டி அகமதபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

2-வது தகுதி சுற்றில் வெல்லப்போவது யார்? - பெங்களூரு அணிக்கு எதிராக ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு! | Rr Chose To Bowl First Qualifier2 Rcb

14 ஆண்டுகளுக்கு பிறகு இறுதி போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் ராஜஸ்தான் அணியும் முதல் முறை ஐபிஎல் கோப்பையை முத்தமிட பெங்களூரு அணியும் முயற்சிக்கும் என்பதால் இன்றைய போட்டியில் அனல் பறப்பது உறுதி.

தற்போது இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனை தொடர்ந்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.