அசத்திய பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் சிங் - சவாலான இலக்கை நிர்ணயித்த ராஜஸ்தான்
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸூக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது.
14வது ஐபிஎல் சீசனின் இன்று நடைபெற்ற 32வது ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் எவின் லீவிஸ் 36 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 49 ரன்களும், ஹிபால் லோம்ரர் 43 ரன்களும், லியாம் லிவிங்ஸ்டன் 25 ரன்களும் விளாச 20 ஓவர்களில் அந்த அணி 185 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.
பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், இஷான் பொரெல் மற்றும் ஹர்பிரீத் பிரார் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடி வருகிறது.