எதிர்கட்சி துணைத் தலைவராக பதவி ஏற்றார் ஆர்.பி.உதயகுமார்

Tamil nadu AIADMK Edappadi K. Palaniswami
By Anbu Selvam Mar 30, 2023 06:49 AM GMT
Report

அதிமுக துணை தலைவராக பதவி ஏற்றார் ஆர்.பி.உதயகுமார்

அதிமுக பொது செயலாளராக இபிஎஸ் 

அதிமுக பொது செயலாளர் பதவி குறித்த விவகாரம் தொடர்பான வழக்கு மார்ச் 22-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றல் விசாரணைக்கு வந்தது நீதிபதி குமரேஷ்பாபு ஒற்றை தலைமையில் விசாரிக்கப்பட்டது .

இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக அறிவித்து தீர்ப்பு வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.

எதிர்கட்சி துணைத் தலைவராக பதவி ஏற்றார் ஆர்.பி.உதயகுமார் | Rp Udayakumar Deputy Leader Of The Opposition

இந்த வெற்றியை அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தொண்டர்கள் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து கொண்டாடினர் .

இந்த நிலையில் ஓபிஎஸ் அணி தனி நீதிபதி விசாரித்து வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து உள்ளார்கள் . இந்த மேல் முறையீட்டு மனுவை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது .

அதிமுக பொதுக்குழு  முடிவு  

இந்த நிலையில் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க வலியுறுத்தியுள்ளர். இதனால் சட்டசபையில் ஓபிஎஸ் இருக்கை மாற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

எதிர்கட்சி துணைத் தலைவராக பதவி ஏற்றார் ஆர்.பி.உதயகுமார் | Rp Udayakumar Deputy Leader Of The Opposition

இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் "சட்டமன்ற உறுப்பினர்களின் ஏகமனதாக அதிமுக துணை தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.