ராயபுரம் சூப்பர் மார்க்கெட்டில் ரூ.7 லட்சம் கொள்ளை... 6 பேர் கைது
ராயபுரத்தில் சூப்பர் மார்க்கெட்டில் ரூ.7 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 6 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
போரூர் பகுதியை சேர்ந்த சாகுல் அமீது என்பவர் ராயபுரம் வடக்கு மாதா சாலையில் கிரசன்ட் சூப்பர் மார்க்கெட் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார்.
கடந்த வாரம் வழக்கம் போல் கடையை திறக்க சென்றபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை எடுத்து உள்ளே சென்று பார்த்தபோது கடையில் வைக்கப்பட்டு இருந்த ரூ.7 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக ராயபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கோபிநாத், மதன், விஷ்வா, அஜித், ஆனந்தராஜ், பார்த்திபன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.2.59 லட்சம் பணம், 6 கிராம் தங்கம், 2 வெள்ளி கொலுசு, 4 கத்திகள், ஒரு மோட்டார்சைக்கிள், உள்ளிட்ட பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.