ராயல் என்பீல்டு பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி - என்ன தெரியுமா?

rate increased royal enfield
By Anupriyamkumaresan Sep 10, 2021 02:38 AM GMT
Report

இந்தியாவின் இருசக்கர வாகனங்களின் முன்னோடியாக திகழும் ராயல் என்ஃபீல்ட் வாகனங்களின் சமீபத்திய வரவான கிளாசிக் 350 வாகனங்களின் விலை தற்போது ரூ.6,431 ஆக அதிகரித்துள்ளது. அதே போல பையர்பால், சூப்பர்நோவா, ஸ்டெல்லர் போன்ற வாகனங்களும் விலை உயர்வை கண்டுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கண்டு பலரும் வாகனங்களை வாங்குவதில் தயக்கம் காட்டி வரும் நிலையில் வாகன உற்பத்தியாளர்களும் வாகனங்களின் விலையை அதிகரித்து வருகின்றனர். இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பாளரான TVS நிறுவனமும் வாகனங்களின் விலையை சமீபத்தில் உயர்த்தியது.

ராயல் என்பீல்டு பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி - என்ன தெரியுமா? | Royal Enfiled Bike Rate Increased Public Shocked

தற்போது ராயல் என்ஃபீல்ட் வாகனங்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்ட பன்னாட்டு மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்ட் தனது வாகனங்களின் விலையை உயர்த்தியுள்ளது.

வாகன உற்பத்தியில் பழமையான அனுபவங்களை புதிய யுக்தியை புகுத்தி வரும், ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் வாகனங்கள் தற்போது வாடிக்கையாளர்களை பெரிதளவு கவர்ந்து வருகிறது. அந்த வகையில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் 2021 ஆம் ஆண்டுக்கான கிளாசிக் 350 மாடலை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

ராயல் என்பீல்ட் Meteor 350 ஃபயர்பால்:

பயர்பால் ரெட் – ரூ.1,98,537 லிருந்து ரூ.6,428 ஆக அதிகரித்துள்ளது.

பயர்பால் மஞ்சள் – ரூ.1,98,537 லிருந்து ரூ.6,428 அதிகரிப்பு.

பயர்பால் பிளாக் கஸ்டம் – ரூ.2,00,374 லிருந்து ரூ.6,428 அதிகரிப்பு.

பயர்பால் கிரே கஸ்டம் – ரூ.2,00,374 லிருந்து ரூ.6,428 அதிகரிப்பு.

பயர்பால் ஒயிட் கஸ்டம் – ரூ.2,00,374 லிருந்து ரூ.6,428 அதிகரிப்பு.

பயர்பால் கிரீன் கஸ்டம் – ரூ.2,00,374 லிருந்து ரூ.6,428 அதிகரிப்பு.

பயர்பால் பிரவுன் கஸ்டம் – ரூ.2,00,374 லிருந்து ரூ.6,428 அதிகரிப்பு. 

ராயல் என்பீல்டு பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி - என்ன தெரியுமா? | Royal Enfiled Bike Rate Increased Public Shocked

ராயல் என்பீல்ட் Meteor 350 ஸ்டெல்லர்:

ஸ்டெல்லர் நீலம் – ரூ.2,04,527 லிருந்து ரூ.6,428 அதிகரிப்பு.

ஸ்டெல்லர் சிவப்பு – ரூ.2,04,527 லிருந்து ரூ.6,428 அதிகரிப்பு.

ஸ்டெல்லர் பிளாக் – ரூ.2,04,527 – ரூ.6,428 அதிகரிப்பு.

ஸ்டெல்லர் தூய கருப்பு – ரூ.2,06,364 லிருந்து ரூ.6,429 அதிகரிப்பு.

ராயல் என்பீல்ட் Meteor 350 சூப்பர்நோவா:

சூப்பர்நோவா பிரவுன் – ரூ.2,14,513 லிருந்து ரூ.6,429 அதிகரிப்பு.

சூப்பர்நோவா ப்ளூ – ரூ.2,14,513 லிருந்து ரூ .6,429 அதிகரிப்பு.

சூப்பர்நோவா சில்வர் கஸ்டம் – ரூ.2,16,351 லிருந்து ரூ.6,431 அதிகரிப்பு.

சூப்பர்நோவா பீஜ் கஸ்டம் – ரூ.2,16,351 லிருந்து ரூ.6,431 அதிகரித்துள்ளது.