துடுப்புப்படகு போட்டியில் அசத்திய இந்திய ஜோடி
டோக்கியோ ஒலிம்பிக்கில் துடுப்புப்படகு போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு இந்திய ஜோடி அர்ஜூன் லால், அரவிந்த் சிங் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றனர்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் துடுப்பு படகு போட்டியில் ஆண்களுக்கான லைட்வெயிட் இரட்டையர் ஸ்கல்ஸ் ஹீட் தகுதிச்சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா தரப்பில் அர்ஜூன் லால் ஜாட் - அரவிந்த் சிங் ஜோடி பங்கேற்றது.
ஒவ்வொரு பிரிவிலும் தலா 6 அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி நேரடியாக அரையிறுதிக்கு தகுதிபெறும். மற்ற 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முந்தைய சுற்றான ரிபிசேஜ் சுற்றுக்கு சென்று அதில் முதல் 3 இடங்களுக்குள் நுழைந்தால் அரையிறுதிக்கு தகுதிபெறலாம்.
இப்போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இந்திய அணி 6:40.33 நிமிடங்களில் அடைந்து 5ஆம் இடம் பிடித்தது. இதனால், அரையிறுதி சுற்றுக்கு முந்தைய சுற்றான ரிபிசேஜ் சுற்றுக்கு சென்றது.
அங்கு நடைபெற்ற போட்டியில் 3 வது இடம் கிடைத்தது.
இதன் மூலம் இந்திய ஆண்கள் அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. அரையிறுதி போட்டி ஜூலை 27-ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.