ரவுடி பேபி சூர்யா,திருச்சி சாதனா மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்!
இணைய தளங்களில் ஆபாச பேச்சுக்களை பதிவு செய்து வரும் ரவுடி பேபி சூர்யா உள்பட சிலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக காங்கிரஸ் கட்சி தென்சென்னை மாவட்ட செயலாளர் புனிதவள்ளி, சமூக ஆர்வலர் சுமித்ரா, எல்லை பாதுகாப்பு படை வீரர் காளிராஜ் ஆகியோர் கூட்டாக இன்று தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தனர்.
ஆனால் டிஜிபி அலுவலக பாதுகாப்பு பிரிவு போலீசார் இன்று அதிகாரிகள் இல்லை என்பதால் புகாரை ஆன்லைனில் கொடுக்கும் படி அறிவுறுத்தினர்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சமூக ஆர்வலர் சுமித்ரா, "சமூக வலைதளங்களில் ரவுடி பேபி சூர்யா, திருச்சி சாதனா, சந்தான லட்சுமி, காத்து கருப்பு, சேலம் மணி,
உள்பட சிலர் ஆபாச பேச்சுக்களை பேசியும் நடித்தும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கின்றனர்.
ஆபாச பேச்சுக்கள் முகம் சுழிக்க வைக்கிறது. பள்ளி மாணவ- மாணவிகள், இளைஞர்கள் போன்றோர் இவர்களின் ஆபாச பேச்சுக்களால் மிகவும் பாதிக்கப்பட உள்ளதால் இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை
எடுக்க வேண்டும். இவர்களின் ஆபாச இணைய தளங்களை முடக்கச் செய்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சுமித்ரா கூறினார்.