சேனலை முடக்கினால் தீ குளிப்பேன் ரவுடி பேபி சூர்யா ஆவேசம்!
டிக்டாக் மூலம் அறிமுகமானவர் சுப்புலட்சுமி என்ற ரவுடி பேபி சூர்யா.திருப்பூர் மாவட்டம் செட்டிபாளையம் அடுத்த அய்யம்பாளையம் அருகே உள்ள சபரி நகரைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. டிக்-டாக்கில் பிரபலமடைந்ததால் இவரது பெயரை ரவுடி பேபி சூர்யா என மாற்றிக்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தேவி என்பவர், ரவுடி பேபி சூர்யா மீது புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், ‛ தான் யூடியூப் பயன்படுத்துவதாகவும் , தன்னுடைய மகன் மற்றும் மகள்கள் தன்னுடைய செல்போனை ஆன்லைன் வகுப்பிற்காக பயன்படுத்தும் போது, ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கா இருவரும் அவர்களின் யூ ட்யூப் சேனலில் பொதுத்தளத்தில் ஆபாசமாக பேசுவதும் , அரைகுறை ஆடையுடன் தோன்றுவதும் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பிற்கு உதவி செய்ய பொதுமக்களிடம் பணம் வசூலிலும் ஈடுபடுகின்றனர். மேலும் மதுவை வாங்கி குடிப்பது மற்றும் விற்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது தனது மொபைல் போனில் வருவதாகவும், இதனால் தங்களின் குழந்தைகள் பாதிக்கப்படுவதால் அவர்களின் யூடியூப் சேனலை முடக்க வேண்டும்,’ என்று புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரினை முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியிருந்தார். அதற்கான நகலை திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதிக்கும் அனுப்பினார். இந்த நிலையில் இந்த புகார் மனு குறித்து மாவட்ட முதன்மை நீதிபதி ஸ்வர்ணம் ஜெ.நடராஜன் ஒரு பரிந்துரையை செய்துள்ளார். அந்த பரிந்துரை கடிதத்தில் , ‛இந்த புகார் மனு குறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கையை எடுக்குமாறு,’ திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பரிந்துரை செய்திருந்தார்.
இந்தநிலையில் ரவுடி பேபி சூர்யா தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓர் வேண்டுகோள் வைப்பதாக தெரிவித்துள்ளார்.தனது சேனலை முடக்க கோரி நீதிபதி உட்பட உயர் அதிகாரிகள் உத்தரவிட்டிருப்பதாக கூறிய அவர் நான் ஆபாசமாக பேசுவதாகவும் என்னை ஆபாசமாக பேச துாண்டியது யார்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.பின்னர் அவர் தான் வறுமையில் இருந்த போது யாரும் உதவிடவில்லை என்றும் என்னுடைய பேர் தெரிய வேண்டும்,என்னுடைய புகழ் தெரிய வேண்டும்,என்னிடம் உள்ள அந்த கலைகள் தெரியவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் என்னுடைய வீடியோவை வெளியிடும் மற்ற யூடியூப் சேனல்களை முடக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.தான் உழைத்து சாப்பிடுவதாகவும்,யாருக்கும் பயப்பட மாட்டேன் என காட்டமாக பேசினார். எனது சேனலை முடக்கினால் தான் தவறான வழிக்கு போவேன்,சத்தியமா நான் தவறான வழிக்கு ,போவேன் என எச்சரிக்கை விடுத்த ரவுடி பேபி சூர்யா,தன்னை கைது செய்தால் தீ குளிப்பேன் என மிரட்டல் விடுக்கும் தோனியில் பேசினார்.
ஆபாச பேச்சால் பிரபலமான இவரை போலீசார் கைது செய்வார்களா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.