39 வழக்கு; நேற்று கைது இன்று என்கவுண்டர் - யார் இந்த சீசிங் ராஜா?

Tamil nadu Chennai Tamil Nadu Police
By Karthikraja Sep 23, 2024 06:18 AM GMT
Report

பிரபல ரவுடி சீசிங் ராஜா காவல்துறையால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.

சீசிங் ராஜா

தாம்பரத்தில் பிறந்து சென்னையின் பிரபல ரவுடியாக வலம் வந்தவர் சீசிங் ராஜா. ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்ட சீசிங் ராஜா மீது கொலை, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக வழக்குகள் உள்ளன. 

சீசிங் ராஜா

இவர் மீது ஏற்கனவே 6 கொலை வழக்கு உட்பட 39 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் மீது 5 முறை குண்டாஸ் தடுப்பு காவல் போடப்பட்டுள்ளது. 11 வழக்குகளில் இவருக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கைது

இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமைறைவாக இருந்து வந்த சீசிங் ராஜா தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து தாம்பரம் பகுதிகளில் காவல் துறை சார்பில் நோட்டிஸ் ஒட்டப்பட்டிருந்தது. 

சீசிங் ராஜா

சீசிங் ராஜா ஆந்திர மாநிலத்தில் தலைமறைவாக உள்ளதாக வந்த தகவலையடுத்து நேற்று ஆந்திராவில் உள்ள கடப்பா மாநிலத்தில் வைத்து தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டார். 

என்கவுண்டர்

இந்நிலையில் இன்று காலை நீலாங்கரை பகுதியில் வைத்து விசாரித்துள்ளனர். அப்போது, காவல்துறையினரை தாக்கிவிட்டு சீசிங் ராஜா தப்பியோட முயன்றதாக கூறப்படுகிறது. இதில் போலீஸார் தற்காப்புக்காக சுட்டதில் 2 தோட்டாக்கள் பாய்ந்து சீசிங் ராஜா உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்த காவல் துறை இணை ஆணையர், சீசிங் ராஜாவுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. பார் ஊழியரை துப்பாக்கி காட்டி மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். விசாரணையின் போது காவல்துறையினரை தாக்கி விட்டு தப்பி செல்ல முயன்ற போது தற்காப்புக்காக சுடப்பட்டதில் உயிரிழந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு புதிதாக சென்னை காவல் ஆணையராக பொறுப்பேற்ற அருண் ரவுடிகளுக்கு அவர்களுக்கு புரியும் மொழியில் பாடம் எடுக்கப்படும் என தெரிவித்தார். அதன் பின் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் கொல்லப்பட்ட்டார். சில நாட்களுக்கு முன் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இன்று ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.