காஞ்சிபுரத்தில் பல நாட்களாக தேடப்பட்ட வந்த பிரபல ரவுடி சிக்கினார் - எப்படி தெரியுமா?
கொலை, கொலை முயற்சி, அடிதடி என 24 வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி படப்பை குணாவை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த கீரநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சுமதி. இவரது தந்தை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தை அடமானம் வைத்து இரண்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
இதன் பின்னர் நிலத்தின் ஆவணங்களை கேட்டு அடிக்கடி சுமதியை தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுமதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த படப்பை குணாவை மடக்கி பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுவரை அவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி என மொத்தம் 24 வழக்குகள் நிலுவையில் உள்ளது.