குடிப்போதையில் வந்த நபர்.. காய்கறி பெண் வியாபாரி கொடூர கொலை - பகீர் காரணம்!
பெண் வியாபாரியை போதை ஆசாமி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் வியாபாரி
சென்னை, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் அருகில் உள்ள ஒரு தெருவில் கெளரி என்ற பெண் காய்கறி, பழ வியாபாரம் செய்துவந்தார். கணவருடன் சேர்ந்து நேற்று வியாபாரம் செய்து கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த பர்மா சேகர் என்பவர் மதுபோதையில் அவர்களை நோக்கி வந்துள்ளார்.
அப்போது கௌரியிடம் மாமூல் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. கெளரி பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த பர்மா சேகர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கௌரியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
பகீர் காரணம்
கொலையை தடுக்க வந்த கெளரியின் கணவர் மாரியையும் கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் பர்மா சேகரை தப்பியோடிவிடாமல் பிடித்து வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் தெரிவித்தனர்.
இந்த தகவலறிந்து வந்த போலீசார் கௌரியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சேகரை கைது செய்த போலீசார் பல கோணத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.