பிரபல ரவுடி பினு சரண் - கூட்டாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு..!

Police Action Rowdy Surrender Binu ரவுடிபினு சரண்
By Thahir Apr 16, 2022 07:27 AM GMT
Report

ஆன்லைன் மூலம் செல்போனை ஆர்டர் செய்து அதைக் கொண்டு வந்த டெலிவரி ஊழியரை மிரட்டி செல்போனை பறித்துக்கொண்டு பணம் தராமல் துரத்திய புகாரில் பிரபல ரவுடி பினு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

சென்னை குளத்துார் லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி பினு.இவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த 2018 ஆம் ஆண்டு புறநகர் பகுதியான மாங்காடு பகுதியில் 100க்கும் மேற்பட்ட ரவுடிகளுடன் வீச்சு அருவாள் கொண்டு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார்.

அப்போது தான் அவர் பிரபல ரவுடி பினு என்று பிரபலமாக தெரியவந்தார். இதன் பின் தான் திருந்தி வாழப்போவதாக அறிவித்துவிட்டு தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த 13-ம் தேதி தேனாம்பேட்டை எல்லைக்குட்பட்ட ஜி.என.செட்டி சாலையில் ஆன்லைன் மூலம் செல்போன் ஆர்டர் செய்துள்ளார்.

அப்போது அந்த போனை டெலவரி நபர் கொண்டுவந்த போது பணத்தை கொடுக்காமல் தனது கூட்டாளிகளுடன் அடித்து,மிரட்டி செல்போனை பறித்துக்கொண்டதாக புகார் எழுந்தது.

அந்த புகாரை விசாரித்த போது தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது பினு என்பது தெரியவந்தது. ரவுடி பினுவை தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று இரவு தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

அதன்பின் அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் அதன்பின் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கைதிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் போலீசார் இவருடன் தொடர்புடைய கூட்டாளிகள் இருவரை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.