‘லவ் பேர்ட்ஸ்’ஸாக சுற்றி திரிந்த ரவுடி பேபி சூர்யா - சிக்கா ஜோடி - சிறையில் அடைப்பட்டது எப்படி?
குட்டை பாவாடையோடு, அரை குறை ஆடை அணிந்து ஆபாச வார்த்தையால் அர்ச்சனை என்று டிக்டாக் முழுவதும் கவர்ச்சியால் கட்டி அணைத்தார் ரவுடி பேபி சூர்யா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
இவர்களைப் போன்றோரின் அட்டகாசம் தாங்க முடியாமல், டிக்டாக் செயலிக்கு தடை வேண்டும் என்ற கோஷம் எழுந்து வந்தது. பிறகு, சன செயலிகள் தடையில், தன்னாலேயே தடையானது டிக்டாக் செயலி. டிக்டாக் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து, பல குற்றச் செயல்களில் அவர் ஈடுபட்டார் என்றும், அதனால் ஏற்பட்ட புகார்களால் சிக்கினார்.
இந்த நேரத்தில், தன்னை பாடகர் என்று கூறிக்கொண்டு சிக்கா என்பவர், சூர்யாவோடு நட்பானார். இவர்களது நட்பு பின்பு கதலர்களாக இணைந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக, திருப்பூரில் காதல் கொண்டி வந்த ஜோடி, அதன் பின்னர், அவ்வப்போது அடித்துக்கொள்வதும், பின்னர் சேர்ந்து கொள்வதும் தொடர்ந்து வந்தது.
சிக்காவை தூக்கி போட்டு மிதிப்பது, மண்டையை உடைப்பது போன்ற செயல்களில் செல்லமாக செய்து வந்தார் ரவுடி பேபி சூர்யா. பதிலுக்கு சிக்காவும், ரவுடி பேபியை கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்வதை தொடர்ந்து கொண்டிருந்தார்.
இதற்கிடையில், தனது சொந்த ஊரான மதுரைக்கு திரும்பிய சிக்கா, ரவுடி பேபியையும், அவரது குழந்தைகளையும் அழைத்து வந்து திருநகரில் தனி வீட்டில் குடியேறினார்.
அங்கும் அன்பாகத்தான், அவர்களது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. திடீரென சிக்காவுக்கு தன் முதல் மனைவி மீது பாசம் வந்தது. இதனையடுத்து, ரவுடி பேபியை பிரேக்அப் செய்ய முயற்சி செய்தார் சிக்கா.
இதனால், இவர்கள் இருவருக்குள் சண்டை வந்தது. ரவுடி பேபியின் அழைப்பை தவிர்த்து வந்தார் சிக்கா. சந்திப்பதையும் தவிர்த்தார். இதனையடுத்து, சூர்யாவை விட்டு விலகத் தொடர்ந்தார்.
இதனால், ஆத்திரமடைந்த சூர்யா, சிக்காவுக்கு எதிரான வீடியோக்களை வெளியிட ஆரம்பித்தார். சிக்காவும் பதிலுக்கு ரவுடி பேபியை சாடி வீடியோக்கள் வெளியிட்டார். 2 நாட்களாக இந்த சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.
இதனையடுத்து, இவர்கள் இருவர் மீதும் தொடர்ந்து புகார் வந்ததையடுத்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். லவ் பேர்ட்ஸ்ஸாக சுற்றித் திரிந்தவர்கள் இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.