என் மேல விபச்சார கேஸ் போட்டா தீக்குளிப்பேன்- மிரட்டும் ரவுடி பேபி சூர்யா
தனது யூடியூப் சேனலை முடக்கினால் தவறான பாதைக்கு செல்வேன் என ரவுடி பேபி சூர்யா மிரட்டல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்காததால் மாணவர்கள் ஆன்லைனில் கல்வி கற்று வருகின்றனர். இதை பயன்படுத்தி பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மாணவர்களை ஆபாச வலைதளங்களுக்கு அடிமையாக்கி பணம் சம்பாதிக்கும் நோக்கில் சிலர் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பல வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இதுதொடர்பாக பல புகார்கள் வந்த நிலையில் ஆபாச இணையதளங்களை முடக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனிடையே திருச்சியை சேர்ந்த ரவுடி பேபி என அழைக்கப்படும் டிக்டாக் புகழ் சூர்யாவின் யூடியூப் சேனலையும் முடக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரவுடி பேபி சூர்யா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.அதில் அவர், ‘‘ஆபாச வீடியோக்களை வெளியிடும் யூடியூப் சேனலை முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதில் எனது சேனலை முடக்குறீங்களா... முடக்குங்க.... நான் தவறான பாதைக்கு போவேன்.. சத்தியமா போவேன். என் பிள்ளை மேல ஆணையா போவேன்... போவேன்... 100 பேருடன் ‘அதுக்கு’ தயார்.
மேலும் என் மேல விபச்சார கேஸ் போட்டா தீக்குளிப்பேன்... என்பதோடு அருவருக்கத்தக்க வகையிலும் பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.