டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீண்டும் கைது
டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யாவை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
காவல் ஆணையரிடம் புகார்
யூடியூப் சேனல் நடத்தி வரும் கோவையை சேர்ந்த சேர்ந்த பெண் சித்ரா. இவரது சேனலில் வரும் நிகழ்ச்சி தொடர்பாக ரவுடி பேபி சூர்யா ஆபாசமாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து சித்ரா, மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் புகார் அளித்த நிலையில் இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பேரில் மாநகர் சைபர் கிரைம் போலீசார் இன்று காலை ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் ஆகியோரை கைது செய்தனர்.
சிக்கா மற்றும் ரவுடி பேபி சூர்யா ஆகிய இருவரும் ஏற்கனவே இன்ன்னொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து அதன் பின்னர் வெளியே வந்த நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.