’ரெளடி பேபி’ பாடல் புதிய சாதனை - ரசிகர்கள் உற்சாகம்

Dhanush Sai Pallavi Maari 2 Rowdy baby
By Petchi Avudaiappan Jul 09, 2021 01:19 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் இடம்பெற்ற ‘ரெளடி பேபி’ பாடல் யூடியூபில் 5 மில்லியன் லைக்குகளைக் குவித்து சாதனை செய்துள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான மாரி 2 படத்தை பாலாஜி மோகன் இயக்கியிருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படத்தின் ‘ரெளடி பேபி’ பாடல் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்க ஹிட் அடித்தது. 

இந்த பாடலுக்கு ஜானி மாஸ்டர், பிரபுதேவா உள்ளிட்டவர்கள் நடனம் அமைத்திருந்தனர்.

ஏற்கனவே, ‘ரெளடி பேபி’ பாடல் 1 பில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ள முதல் தென்னிந்திய பாடல் என்ற பெருமையைப் பெற்ற நிலையில், தற்போது யூடியூபில் 5 மில்லியன் லைக்ஸ்களைக் குவித்து தென்னிந்தியாவில் 5 மில்லியன் லைக்ஸ்களைக் குவித்த முதல் பாடல் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.