நிலவின் தென்துருவத்தில் இருந்த புதையல்கள்....கண்டறிந்த சந்திரயான் 3
நிலவில் ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் விக்ரம் லாண்டரின் ரோவர் சாதனம் நிலவில் இருக்கும் கனிமங்களை கண்டுபிடித்திருப்பதை இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான் 3
நிலவின் தென்துருவத்தில் ஆய்வினை மேற்கொள்ள தனது இரண்டாவது முயற்சியில் இந்தியா மாபெரும் வெற்றியை பெற்று உலகநாடுகளின் பாராட்டுகளை பெற்று வருகின்றது. இது வரை நிலவின் தென்துருவத்தில் எந்த ஒரு விண்கலமும் இறங்காத நிலையில், அதனை இந்திய விஞ்ஞானிகள் செய்து காட்டி இருக்கிறார்கள்.
சந்திரயான் - 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவின் தென் துருவத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. விக்ரம் லெண்டரில் இருந்து நிலவில் ஆய்வினை மேற்கொண்டு வரும் ரோவர் சாதனம் தற்போது மூன்று கனிமங்களை கண்டுபிடித்துள்ளதை இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கனிமங்களை கண்டுபிடித்த ரோவர்
இது குறித்த இஸ்ரோ வெளியிட்ட அதிகாரபூர்வ செய்தி அறிக்கையில், பிரக்யான் ரோவரில் பொருத்தப்பட்டுள்ள லேசர் ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் கருவி, நிலவின் தென் துருவத்தில் சல்பர் தனிமம் இருப்பதை உறுதி செய்துள்ளது.
அதேபோல், அலுமினியம், கால்சியம், இரும்பு, டைட்டினியம், மக்னிசீயம், சிலிகான் ஆகிய தனிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தில் ஆக்சிஜன் இருப்பதும் உறுதியாகியுள்ளது. ஹைட்ரஜன் உள்ளதா என்பதை கண்டுபிடிக்கும் ஆய்வுப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.