உலகின் சிறந்த ஆசிரியர்: யார் இந்த ரூபிள் நாகி?
உலகின் சிறந்த ஆசிரியர் என்ற விருதை வென்றுள்ளார் இந்தியாவின் ரூபிள் நாகி.
கல்வியில் சிறந்த சேவையாற்றும் ஆசிரியர்களுக்கு 2015ம் ஆண்டு முதல் உலகின் சிறந்த ஆசிரியருக்கான பரிசு வர்க்கி அறக்கட்டளை மூலமாக வழங்கப்படுகிறது.
இந்த விருதை வென்றுள்ளார் இந்தியாவை சேர்ந்த ரூபிள் நாகி, துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் பரிசை வழங்கினார், அவருக்கு 1 மில்லியன் டொலர் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.

யார் இந்த ரூபிள் நாகி?
ஜம்மு காஷ்மீரில் பிறந்த ரூபிள் நாகி, லண்டனில் படித்தவர், சமூக செயற்பாட்டாளரும் கூட. குடிசைப்பகுதிகளில் வசிக்கும் சிறுவர்/சிறுமிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த அயராது பாடுபட்டார்.
பாழடைந்த சுவர்களில் ஓவியம் வரைந்து வகுப்பறைகளாக மாற்றினார், இதன் மூலம் மிக எளிய வகையில் கல்வியை கொண்டு சென்றார்.

Rouble Nagi Art Foundation மூலமாக 800க்கும் மேற்பட்ட கற்றல்மையங்களை உருவாக்கியுள்ளார்.
விருதை வென்றுள்ள ரூபிள் நாகி, தனக்கு கிடைத்த பரிசுத்தொகையை ஏழை எளிய இளைஞர்களுக்கு இலவச தொழிற்கல்வி மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு வழங்கும் கல்வி நிறுவனத்தை உருவாக்க பயன்படுத்தப்போவதாக அறிவித்துள்ளார்.

தமிழர் விவகாரத்தில் குற்றம் செய்தவர்களை பாதுகாக்கும் இலங்கை அரசு : வேலன் சுவாமிகள் குற்றச்சாட்டு IBC Tamil