‘’ கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை ‘’ : பதவியை ராஜினாம செய்த அமைச்சர் காரணம் என்ன?

srilanka resign roshanranasinghe stateminister
By Irumporai Apr 02, 2022 08:50 AM GMT
Report

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு மற்றும் வின்னை முட்டும் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது.

பெட்ரோல்,டீசல் தட்டுப்பாடு காரணமாக மக்கள் மண்ணெண்ணையை வாங்க நீண்ட தொலைவிற்கு வரிசையில் நிற்கின்றனர்.இதில் 13 மணி நேர மின்வெட்டு மக்களை முற்றிலுமாக முடக்கியுள்ளது.  

இதனால் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று கொழும்புவில் உள்ள அவர் வீட்டின் முன்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் 45 பேர் கைது செய்யபட்டுள்னர்.கொழும்புவின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும், இலங்கையில் நிலவும் இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக அவசர நிலை பிரகடனத்தை அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்தார்.  

இந்நிலையில்,இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தவிப்பதை சுட்டிக்காட்டி அமைச்சர் ரோஷன் ரணசிங்கே பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.குறிப்பாக எரிபொருள்,உணவுப்பொருட்கள் வாங்க மக்கள் வரிசையில் நிற்பது வேதனையளிக்கிறது என்று சுட்டிக்காட்டி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

அதன்படி,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்தும்,இலங்கை பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்டத் தலைமைப் பதவியிலிருந்தும் மே 01 ஆம் தேதி முதல் இராஜினாமா செய்வதாக ரோஷன் ரணசிங்கே ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.