ரோப் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு..!

Death Accident Rescue Injury Airforce Jharkhand RopeCar
By Thahir Apr 12, 2022 04:13 AM GMT
Report

ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் உள்ள திரிகுட் மலைகளில் ரோப் கார் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

திரிகுட் மலைப் பகுதியில் அமைந்துள்ள ரோப் கார்களில் அதிகம் பேர் செல்வது வழக்கம். இந்நிலையில் ரோப் கார் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.இதையடுத்து ரோப் கார்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. ரோப் கார்கள் அந்தரத்தில் நிறுத்தப்பட்டதால் 40க்கும் மேற்பட்டோர் சிக்கித்தவித்தனர்.

இதனிடையே இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தேசிய பேரிடர் மீட்பு படையினர்,ராணுவத்தினர்,மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

திங்கள் மாலை வரை 30 பேரை மீட்டுள்ளதாகவும்,இன்னும் 18 பேரை மீட்க வேண்டியுள்ளதாக அமைச்சர் ஹாபிசுல் ஹசன் தெரிவித்துள்ளார்.

ரோப் கார்கள் முறையான பராமரிப்புகள் இன்றி இருந்ததே இந்த விபத்திற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.