2 வருஷமா ரூமை விட்டு வராத இளைஞர் - சுத்தம் செய்ய சென்ற பெண் ஷாக்!
சீனாவில் சில ஹோட்டல்கள் ஆன்லைன் கேம் விளையாடுவோருக்காகவே பிரத்யேகமான சேவைகளை வழங்கி வருகின்றன.
இ-ஸ்போர்ட்ஸ் ஹோட்டல்
ஹோட்டல் அறைகளை எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும் வாடகைக்கு எடுத்து வீடியோ கேம்களை விளையாடலாம். அதன்படி அறையை வாடிக்கையாளர் ஒருவர் வாடகைக்கு எடுத்து வீடியோ கேம் விளையாடி உள்ளார்.

சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகே ஹோட்டல் அறையை காலி செய்துள்ளார். கழிவறை, கேமிங் அறை, ஹால் என அனைத்து இடங்களிலும் சுமார் ஒரு மீட்டர் உயரத்துக்கு சாப்பிட்டு போட்ட உணவு பொட்டலங்கள், கழிப்பறைத் தாள்கள் என குப்பைகள் மலைபோல் குவிந்திருந்தன.
கேமிங்
இதனை சுத்தம் செய்ய சென்ற பெண் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.அறையை விட்டு வெளியேவே செல்லாமல் 2 ஆண்டுகள் வீடியோ கேம் விளையாடி உள்ளதாக ஹோட்டல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகப்படியான விளையாட்டு, தூக்கக் கலக்கம் மற்றும் திரை நேரம் அனைத்தையும் எடுத்துக்கொள்ளும் போது சுகாதாரம் குறைந்து வருவது குறித்து மருத்துவர்களும் பொது சுகாதார ஆராய்ச்சியாளர்களும் கவலைகளை எழுப்பியுள்ளனர்.