ரோஜா சீரியலிலிருந்து விலகுகிறார் அர்ஜூன்... - ஷாக்கான ரசிகர்கள்
சீரியல் ‘ரோஜா’
சன் டிவியில் தினமும் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் ‘ரோஜா’. இந்த சீரியலில் நாயகியாக பிரியங்கா நல்காரி, நாயகனான அர்ஜுன் ரோலில் சிபு சூர்யன் நடித்து வருகின்றர். ரோஜா சீரியலில் ரோஜா, அர்ஜுன் ஆகிய இரண்டு பேருக்கும் ரசிகர்கள் அதிகம். டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சீரியல் எப்போதும் முதலிடம்தான்.
வீட்டு பெண்மணிகளின் பேராதரவோடு இந்த சீரியல் 100 எபிசோடுகளை கடந்து வெற்றி நடை போட்டு வருகிறது.
நாயகன் சிபு சூர்யன் சீரியலிலிருந்து விலகல்
இந்நிலையில், தற்போது இந்த சீரியல் நாயகன் சிபு சூர்யன் சீரியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவரது அறிவிப்பால் ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர். இந்தத் தகவலை அவர் தனது இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், "நான் ரோஜா சீரியலில் இருந்து விலகுகிறேன், வரும் ஆகஸ்ட் வரை மட்டுமே நடிப்பேன். என்னுடைய சீரியல் ப்ரொடக்ஷன் டீம் அனுமதி உடன் நான் மற்றொருபுதிய பயணத்தை தொடங்குகிறேன்.
மக்கள் இது நாள் வரை எனக்கு தந்த ஆதரவிற்கு "குட்பை'' சொல்வது அவ்வளவு சுலபம் அல்ல, ஆனால் சில நேரங்களில் அது மிக அவசியமான ஒன்றாகிறது. அர்ஜுன் கதாபாத்திரம் எனக்கு எப்போதும் ஸ்பெஷல், நான் மறக்கவே முடியாது. மீண்டும் உங்களை புதிய பயணத்துடன் சந்திக்கிறேன்'' என்று உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவால் ரசிகர்கள் பெரிதும் சோகமடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.