கோல் அடித்த மகிழ்ச்சியில் சட்டையை கழற்றி சம்பவம் செய்த ரொனோல்டோ - நடுவர் செய்த சிறப்பான செயல்

uefa champions league christiano ronaldo
By Petchi Avudaiappan Sep 30, 2021 09:49 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கால்பந்து
Report

 கால்பந்து வீரர் ரொனால்டோ கோல் அடித்த உற்சாகத்தில் டீசர்ட்டை கழற்றி பார்வையாளர்கள் மத்தியில் வீசிய சம்பவத்திற்கு மஞ்சள் கார்டு கொடுத்து நடுவர் எச்சரித்துள்ளார். 

இங்கிலாந்தில் யூஇஎஃப்ஏ  சாம்பியன் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடந்த போட்டியில் ரொனால்டோவின் மேன் யூனைடட்  அணியும் வில்லேரியல்  அணியும் மோதின. இதில் ரொனால்டோவின் அட்டகாசமான கோல் காரணமாக மேன் யூனைடட் அணி 2-1 என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனிடையே இந்தப் போட்டியின் போது இரண்டு அணிகளும் 1-1 என்ற நிலையில் இருந்தபோது, 95வது நிமிடத்தில் கோல் அடித்து ரொனால்டோ அசத்தினார் . கோல் அடித்த உற்சாகத்தில் உடனே அவர் தனது டீசர்ட்டை கழற்றி பார்வையாளர்கள் மத்தியில் வீசி ஏறிந்தார். \

இதனால் அவருக்கு நடுவர் மஞ்சள் கார்டு கொடுத்து எச்சரிக்கை செய்தார். இந்நிலையில் இந்த போட்டியின் மூலம் சாம்பியன் லீக் போட்டி வரலாற்றில் அதிக முறை (178) முறை கலந்துகொண்டு விளையாடிய வீரர் என்ற சாதனையையும் ரொனால்டோ படைத்துள்ளார்.