வரலாற்று சாதனை படைத்தார் ரொனால்டோ - குவியும் பாராட்டு
கால்பந்து விளையாட்டில் ஜாம்பவனாக வலம் வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவருடைய விந்தையான கால்பந்து விளையாடும் ஸ்டைல் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும்.
இந்நிலையில், மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு திரும்பிய பிறகு முதல் ஹாட்ரிக் கோல்களை அடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ 807 கோல்களை அடித்து கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரராக மகுடம் சூட்டப்பட்டு, சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஓல்ட் ட்ராஃபோர்டில் ரொனால்டோவின் 12-வது நிமிட தொடக்கத்தில் தூரத்திலிருந்து அடிக்கப்பட்ட கோல் இந்த சாதனைக்கு வித்திட்டுள்ளது.
தற்போது ரொனால்டோ அடித்த கோல் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
OUT. OF. THIS. WORLD. ?
— Manchester United (@ManUtd) March 12, 2022
☄️ @Cristiano #MUFC | #MUNTOT pic.twitter.com/OQ93EZtXnd