உலகக் கோப்பை ஃபைனலுக்கு முன்பு உடலுறவில் ஈடுபட்ட கால்பந்து வீரர்...வெளியான உண்மை தகவல்
பிரேசில் அணியின் முன்னாள் சூப்பர் ஸ்டார் ரொனால்டின்ஹோ ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் உடலுறவில் ஈடுபடுவது நல்ல ரிசல்டை கொடுக்கும் என்று கூறியுள்ளார்.
2002ம் ஆண்டு இதே நாள்,ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தி கால்பந்து உலகக்கோப்பையை ஐந்தாவது முறையாக கையில் ஏந்தியது பிரேசில் அணி. பிரேசில் அணி கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணம் இறுதிப் போட்டிக்கு முன்பாக, தங்கள் மனைவி மற்றும் பெண் தோழிகளுடன் உடலுறவில் ஈடுபட்டதால் தான் என்ற வதந்தி காட்டுத் தீயாகப் பரவியது.

இது உண்மையா இல்லையா என்பதை இன்றளவும் கணிக்க முடியாத ஒன்றாக இருக்கும் நிலையில், பிரேசில் அணியின் முன்னாள் சூப்பர் ஸ்டார் ரொனால்டின்ஹோ ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் உடலுறவில் ஈடுபடுவது நல்ல ரிசல்டை கொடுக்கும் என்று கூறியுள்ளார்.
தான் பார்சிலோனா அணிக்காக விளையாடிய காலத்தில் இருந்தே போட்டிக்கு முன்பாக எப்போதும் உடலுறவில் ஈடுபடுவேன் என்றும், அதனால் எந்த பிரச்சனையும் இல்லாமல் நான் புத்துணர்ச்சியுடன் களமிறங்கி விளையாடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.