அரசு இணையதளத்தில் ஆபாச சேட் - நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி பணி நீக்கம்

Donald Trump United States of America
By Karthikraja Feb 26, 2025 05:15 PM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

அரசு இணையதளத்தில் ஆபாச சேட் செய்த அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

டிரம்ப் அரசு

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதலே அந்த நாட்டில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

துளசி கபார்ட்

அரசாங்கத்தின் செலவுகளை குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட DOGE துறையின் தலைவர் எலான் மஸ்க், பல நாடுகளுக்கு வழங்கிய நிதியை நிறுத்தியதோடு, அரசாங்க ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்து வந்தார்.

அதிகாரிகள் பணிநீக்கம்

இந்நிலையில் அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குநராக உள்ள துளசி கபார்ட்(tulsi gabbard), 100 க்கும் மேற்பட்ட உளவுத்துறை ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளார். CIA, FBI, NAS, INR உட்பட அமெரிக்காவின் 18 உளவு ஏஜென்சிகளின் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் பொறுப்பில் இருப்பவர் துளசி கபார்ட். 

tulsi gabbard about intelink

அமெரிக்கா உளவுபிரிவு ஊழியர்கள் தங்களது ரகசிய தகவல்கள் குறித்து விவாதிக்க Intelink என்ற பிரத்யேக சேட் தளத்தை தேசிய பாதுகாப்பு நிறுவனம் உருவாக்கியது. இந்த தளத்தில் உளவுப்பிரிவு ஊழியர்கள் ஆபாச சேட் செய்ததை கிறிஸ்டோபர் ரூஃபோ என்ற ஊடகவியலாளர் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினார். 

இந்த தகவல் வெளியானவுடன் அதன் உண்மை தன்மையை உறுதி செய்த துளசி கபார்ட், அதில் ஈடுபட்ட ஊழியர்களை கண்டறிய உத்தரவிட்டார். அதனையடுத்து 15 வெவ்வேறு உளவு நிறுவனங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அதிகாரிகளை உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.